தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் 'கருப்பு'. இந்த திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தைச் சுற்றிய பல தகவல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அளித்த விளக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கருப்பு திரைப்படத்தில் சூர்யாவுடன் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, இந்த படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்திரன்ஸ், நட்டி மற்றும் ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதனால் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் RJ பாலாஜி அளித்த ஒரு பேட்டியில், கருப்பு திரைப்படத்தின் வெளியீடு தாமதமாவதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்பனை ஆகாததே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். RJ பாலாஜி கூறிய இந்த விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Listen News!