தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இந்த முக்கியமான நாளை முன்னிட்டு விஜய் தனது வாழ்த்து செய்தியை வெளியிட்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.
அவரது பதிவில்,“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Vijay வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பல ரசிகர்களும் மாணவர்களும் அந்த பதிவை பகிர்ந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!