தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.
படம் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனையைப் பதிவு செய்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், Jailer 2 திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் இந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் வெளியாகியதும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Listen News!