தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கி பின்னர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்ற நடிகைகளில் முக்கியமானவர் பிரியங்கா சோப்ரா. இந்தியாவை தாண்டி உலக அளவில் புகழ்பெற்ற நடிகையாக வளர்ந்துள்ள அவர், பல்வேறு சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அவர் பகிர்ந்த நினைவுகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஆரம்பகால திரை வாழ்க்கையில் தமிழிலும் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியான காலத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து தான் தற்போது அவர் சுவாரஸியமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “தமிழன் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வெளியே காத்திருந்ததை பார்த்தேன். அந்த காட்சியை பார்த்த போது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.அந்த ரசிகர்கள் காட்டிய அன்பு மிகவும் விசேஷமானது.
அவர்கள் காட்டிய ஆதரவு ஒரு தெய்வீகமான உணர்வைப் போல இருந்தது. அப்போது தான் இந்திய ரசிகர்கள் தங்களது நடிகர்களுக்கு எவ்வளவு அர்ப்பணிப்புடன் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை நேரில் உணர்ந்தேன்." என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா பகிர்ந்த இந்த நினைவுகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் இந்த கருத்தை சமூக ஊடகங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!