• Apr 14 2026

முடிவுக்கு வந்தது ஹன்சிகாவின் திருமண வாழ்க்கை.. ஜீவனாம்சம் கூட வேண்டாம்.! முழுவிபரம் இதோ

shali / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அவர், தனது அழகும் நடிப்பும் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ஹன்சிகா மற்றும் அவரது கணவர் சோஹேல் கதுரியா ஆகியோருக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஹன்சிகா கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் அப்போது பெரும் கவனத்தை ஈர்த்தது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால், திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த 2025ஆம் ஆண்டு ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியா இருவரும் விவாகரத்துக்காக விண்ணப்பித்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும், இருவரும் இதுகுறித்து பொதுவாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோருக்கு Mumbai Family Court அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இவர்களின் திருமண வாழ்க்கை சட்டரீதியாக முடிவுக்கு வந்துள்ளது. அத்துடன், எந்த விதமான ஜீவனாம்சத்தையும் கோரவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement