• Apr 14 2026

லாபத்தில் பங்கு வாங்கிய முதல் ஹீரோயின் நான் தான்.! மேடையில் மாஸ் காட்டிய பிரபல நடிகை..

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக 'தாய்கிழவி' அமைந்துள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகையான ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளதுடன், புதிய இயக்குநரான சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், திரையுலகில் பேசப்படும் படமாக மாறியுள்ளது.


தாய்கிழவி திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக குடும்ப கதையை மையமாகக் கொண்ட இந்த படம் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சமீபத்தில் தாய்கிழவி படக்குழுவினர் சக்சஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது, “தமிழ் திரையுலகிலேயே லாபத்தில் கிடைக்கும் பங்கில் சம்பளம் பெற்ற ஹீரோயின் நானாக இருப்பேன். சித்தி சீரியல் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தில் தான் பெண்கள் கனெக்ட் ஆனதை பார்க்க முடிகிறது.”என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement