• Apr 14 2026

24 மணிநேரம் தான் டைம்.. ஆடியோவை நீக்குங்க.! ராஷ்மிகாவின் தாயாரது ஆடியோ கசிந்ததால் பரபரப்பு

shali / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக ஊடகங்களில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அவருடைய தாயார் பேசும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், அந்த ஆடியோ அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட பழைய உரையாடல் என்றும், அதை தவறாக பரப்பி வருவதாகவும் ராஷ்மிகா மந்தனா குற்றம் சாட்டியுள்ளார்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த ஆடியோவில், ராஷ்மிகாவிற்கு முன்பு ஒரு கன்னட நடிகருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், பின்னர் அந்த உறவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த நடிகர் ராஷ்மிகாவை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் அந்த ஆடியோவில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து அது குறித்து ரசிகர்கள் மற்றும் இணைய பயனர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் செய்து கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த ஆடியோ அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட பழைய உரையாடல் என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த உரையாடலை தற்போது தவறாக பயன்படுத்தி பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனிப்பட்ட உரையாடலை அனுமதி இல்லாமல் பதிவு செய்து வெளியிடுவது மிகவும் தவறான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, அந்த ஆடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் நபர்கள் உடனடியாக அதை நீக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தனது அறிக்கை வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த ஆடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ராஷ்மிகா மந்தனா திட்டவட்டமாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement