• May 25 2026

மீனா அப்பாவின் பேச்சைக் கேட்டு தடம் மாறும் செந்தில்.. ராஜி எடுத்த அதிரடி முடிவு.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் வேலை செய்யுற இடத்தில கமிஷன் பணத்தை வாங்கிட்டு பயத்தில என்ன செய்யுறது என்று தெரியாமல் ஜோசிச்சுக் கொண்டிருக்கிறார். பின் இப்படி பணம் வாங்கிறது எல்லாம் தப்பில்லையா என்று அந்தப் பணத்தைக் கொடுத்தவரிடம் செந்தில் கேட்க, அதற்கு அவர் நீங்க வாங்காமல் விட்டால் வேறு ஒராள் வாங்கத்தான் போகிறார் என்று சொல்லுறார்.

அதனை அடுத்து மீனாவோட அப்பா செந்திலுக்கு போன் எடுத்து பரவாயில்ல மாப்பிள்ளை நான் நினைச்சதை விட வேளைக்கு வேலையை முடிச்சுக் கொடுத்திட்டீங்க என்கிறார். அதுக்கு செந்தில் அவர் கமிஷன் பணத்தை வைச்சவுடனே எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டு என்கிறார். பின் மீனா அப்பா, இப்படி எல்லாம் சம்பாதிச்சால் தான் வீடு, கார் எல்லாம் வாங்கலாம் என்று சொல்லுறார்.


அதனை அடுத்து வீட்டுக்கு வந்த செந்திலைப் பார்த்த மீனா என்ன ஒருமாதிரி இருக்கீங்க என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் ஒண்ணுமில்ல என்கிறார். அந்த நேரம் பார்த்து அங்க மீனாவோட அப்பாவும் அம்மாவும் வந்து நிற்கிறார்கள். பின் மீனாவோட அப்பா செந்திலைப் பார்த்து நீங்க செய்தது தப்பா சரியா என்று ஜோசிச்சுக் கொண்டிருக்கீங்களா என்று கேட்கிறார்.

அதுக்கு செந்திலும் ஆமா என்கிறார். மறுபக்கம் ராஜி இருட்டில படிச்சுக் கொண்டிருக்கிறதைப் பார்த்த கதிர் பேய் என்று நினைத்துப் பயப்படுறார். பின் ராஜியை லைட் வெளிச்சத்தில இருந்து படிக்க சொல்லிட்டு கதிர் தூங்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement