தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், அரசியல் துறையில் தற்போது செயல்பட்டு வருபவருமான விஜய் குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீப காலமாக விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், ஸ்ரீனிவாஸ் தெரிவித்த கருத்துகள் ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கிடையே விவாகரத்து ஏற்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின.
இந்த தகவல்கள் குறித்து அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், சமீபத்தில் திருமண நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியது. அந்த நிகழ்ச்சிக்கு அவர் நடிகை த்ரிஷாவுடன் சென்ற தகவல்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.

இந்த சூழ்நிலையில், பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் விஜய் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அதன்போது, “விஜய் அரசியலுக்கு வரும் போது புதிய விஷயங்களைச் செய்வார் என எதிர்பார்த்தேன். ஆனால், தற்போது அவர் முதலில் செய்ய வேண்டியது தனது சொந்தப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அதற்குத் தீர்வு காண்பது தான். ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆகவேண்டும் என்றால் தெளிவான தொலை நோக்குத் திட்டங்கள் இருக்க வேண்டும். அதெல்லாம் அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. எனவே, விஜய் மீண்டும் தனது நடிப்புத் தொழிலையே தொடர்வது தான் அவருக்கு சிறந்தது." என்று கூறியுள்ளார்.
ஸ்ரீனிவாஸ் கூறிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. பலரும் இந்த கருத்துக்களை ஆதரித்து கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சிலர் இந்த கருத்துகளை விமர்சித்தும் வருகின்றனர்.
Listen News!