• Mar 11 2026

பெரிய ஹீரோ படங்களுக்கு மறைமுக பதிலா? ‘தாய் கிழவி’ சக்சஸ் மீட்டில் வைரலான ராதிகாவின் பேச்சு

shali / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் தான் 'தாய் கிழவி'. குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளதுடன், அறிமுக இயக்குநரான சிவகுமார்  முருகேசன் இயக்கியுள்ளார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் முன்னேற்றம் கண்டுள்ளது.


பல திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல காட்சிகளுடன் ஓடிவரும் இந்த படம் தற்போது வசூல் ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தகவலின்படி இந்த திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.60 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், சமீபத்தில் படக்குழுவினர் சக்சஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது, “நியாயமான விலையில் டிக்கெட்டுகளை விற்றும் இந்த படம் ரூ.60 கோடி வசூல் செய்துள்ளது. சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை அதிக விலையில் டிக்கெட்டுகளை விற்று பெரிய வசூலைக் காட்டுகின்றனர். ஆனால் நாங்கள் டிக்கெட் விலையை நியாயமாக வைத்து வெற்றி பெற்றுள்ளோம். இதுதான் உண்மையான வெற்றி.” என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement