பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சங்கராந்திகி வஸ்துனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் சமீபத்திய பேட்டில் பிரபல நடிகரை கன்னத்தில் அறைந்தது குறித்து பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை என்ற படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்றார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு. மலையாளம் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
தற்போது பிரபல நடிகர் வெங்கடேஷ் டகுபடி நடிப்பில் உருவாகியுள்ள சங்கராந்திகி வஸ்துனம் என்ற படத்தில் நடித்துள்ளார். மீனாட்சி செளத்ரியும் நடித்துள்ள இப்படத்தில் வெங்கடேஷுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனலில் பேசிய ஐஸ்வர்யா இவ்வாறு கூறியுள்ளார்.
அதில் "நடிகருக்கு கன்னத்தில் பளார் என்று அறையும் சீன் இருக்கு. அப்போ வெங்கடேஷ் சாரை நான் மெதுவாகத்தான் அடித்தேன், அடிக்கும்போது வலிக்கவில்லையா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவரோ வலிக்கவில்லை இன்னும் வேகமாக அடி என்று கூறினார். அதன்பின் கன்னத்தில் பலமாக அறைந்தேன். அதுக்கு அவர் ஒண்ணுமே சொல்லவில்லை" என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
Listen News!