• Mar 09 2026

100 நாட்களில் வந்துவிடும் “Toxic”.. இணையத்தை அலறவிட்ட யாஷின் மாஸான லுக்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் யாஷ், ‘KGF’ தொடரின் அபார வெற்றிக்குப் பிறகு புதிய படமாக ரசிகர்களுக்காக தேர்வு செய்திருக்கும் “Toxic” படம் கோடானகோடி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 


கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், 2026-ன் மிகப்பெரிய பான் இந்திய  படங்களிலொன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த படத்தைச் சுற்றி, “ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம்”, “படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது” போன்ற கிசுகிசுக்கள் இணையத்தில் பரவி வந்தன. ரசிகர்கள் இதனால் குழப்பத்திலும் பதட்டத்திலும் இருந்தனர்.


இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் KVN Productions இரண்டும் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, இன்னும் 100 நாட்களில் படம் சொன்ன தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புடன், ரசிகர்கள் தள்ளிப்போவதாக கூறப்பட்ட செய்திகள் எல்லாம் முற்றிலும் பொய்யானவை என்பதையும், தயாரிப்பில் எந்த தடையும் இல்லையெனவும் அறிந்துள்ளனர். இந்த அறிவிப்புடன் சேர்த்து புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement