தமிழ் திரையுலகில் நெஞ்சை வருடும் கதைக்களமும், அதிரடி மாஸும், ரசிகர்களைக் கவரும் நகைச்சுவையும் ஒரே படத்தில் கலந்த க்ளாசிக் படம் என்றால் அது ‘படையப்பா’ தான். 1999-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் இன்று வரை மக்கள் மனதில் மாஸ்டர் பீஸாக திகழ்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த evergreen entertainer மீண்டும் திரையில் ரீ-ரிலீஸ் ஆகிறது. ரஜினி ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய பரிசாக மாறியுள்ளது. ரசிகர்கள் தியேட்டர்களில் மீண்டும் படையப்பா படத்தினைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், படையப்பா படத்தைச் சுற்றி ஒரு விசேஷமான தகவலை ரஜினி தானே பகிர்ந்திருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் தெரிவித்ததாவது, "மாப்பிள்ளை இவர் தான்.. ஆனா, இவர் போட்டு இருக்கிற சட்டை என்ர..." இந்த காமெடி சீன் எடுக்கும் போது உண்மையாவே செந்திலுக்கு கோபம் வந்துச்சு. ஷூட்டிங் லொகேஷன் மாத்த சொன்னாங்க.
ஆனா செந்தில் நான் இங்கேயே தான் நடிப்பேன்னு சொல்லிட்டாரு. அதுல அவருக்கு ரொம்ப கோபம். அந்தக் கோபத்தோட தான் நடிச்சாரு." என்றார். இந்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!