• Sep 20 2024

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் -வைரலாகும் ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகலாவியரீதியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸாக தான் இருக்க முடியும், அப்படி விஜய் டிவி-யில் இதுவரை ஒளிபரப்பான 5 பிக்பாஸ் சீசனும் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் அந்த ஐந்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார், பிக்பாஸ் என்றால் கமல் தான் என கூறுமளவு அந்நிகழ்ச்சியின் மூலம் பெயரை பெற்றார் கமல்.

அந்த நிகழ்ச்சி மூலம் தனது நிறைய கருத்துக்களை ரசிகர்களிடத்தே கொண்டு சேர்த்தார்.

இதனிடையே மலையாளம் தெலுங்கு என பல்வேறு மொழகளில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது.

அவ்வாறு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் திரையில் வந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மாஸ்ஸான விக்ரம் BGM-உடன் அவர் வந்துள்ள ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.

Advertisement

Advertisement