• Apr 26 2024

உலகப்புகழ் பெற்ற நகை கண்காட்சி.. தீபிகா படுகோனே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை தீபிகா படுகோன்.இவர் 2007 இல் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

இதன் பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார்.

மேலும் ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.தீபிகா படுகோன் கடைசியாக ஷகுன் பத்ராவின் கெஹ்ரையானில் நடித்தார்.

அதற்கு முன், கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தார்.எனினும் தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தையும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்துள்ளார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கார்டியர் நிறுவன கண்காட்சி நிகழ்விற்காக ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்கு தீபிகா படுகோனே சென்றிருந்தார்.மேலும் அந்த கண்காட்சியில் எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கார்டியர் நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோன் ஏற்கனவே கேன்ஸ் படவிழாவில் கார்டியர் நகைகளை அணிந்து வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement