• May 22 2026

மீனா வீட்டிலிருந்து வெளியேறும் விஜயா? க்ரிஷ் உடைத்த உண்மைகள்.. பொறுமை கலைந்த முத்து

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜின் ஷோரூமில் ரோகினியை பார்த்த விஜயா, அங்கிருந்த கேமரா மூலம் ரோகினியை கண்டபடி திட்டுகின்றார். மேலும், “ஒவ்வொரு ஊராக நீ ஆண்களை தேடி அலைகிறாயா? இப்படி காசுக்காக எல்லாம் செய்கிறாயே” என்று மிகக் கேவலமாக பேசுகின்றார்.

இதனால் கோபமடைந்த ரோகினி அங்கிருந்த கேமராவை அடித்து உடைத்து விடுகின்றார். மேலும், “உன்னுடைய அம்மா இப்படியெல்லாம் பேசுகின்றார். ஒரு மனிதனாக கூட நீ இதை தட்டிக் கேட்கவில்லை. இதற்கெல்லாம் அவர் அனுபவிப்பார்” என்று திட்டி விட்டு செல்கிறார்.

இதைத்தொடர்ந்து, ரோகினி கிரிஷை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றார். அங்கு முத்துவும் மீனாவும் வந்து என்ன நடந்தது என்று விசாரிக்க, கிரிஷ் தலைவலி என்று கூறுகின்றார். எதனால் என்று முத்து கேட்க, “அம்மா வீட்டில் பாட்டி கூட சண்டை போடும்போதும், மனோஜ் டாடி உடன் சண்டை போடும்போதும், சிந்தாமணி உடன் பேசும்போதும் தனக்கு தலைவலி வருகிறது” என்று கூறுகின்றார். இதனால் முத்துவும் மீனாவும் அறிவுரை வழங்க, “எனக்கு யாருடைய அறிவுரையும் வேண்டாம்” என்று கூறி ரோகினி அங்கிருந்து கிளம்புகின்றார்.


இன்னொரு பக்கம், மீனாவின் வீட்டிற்கு அவரது அம்மாவின் நண்பிகள் கல்யாண பத்திரிக்கை வைப்பதற்காக வருகின்றார்கள். ஆனால் அங்கு விஜயா இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். மேலும் விஜயா உள்ளே சென்றதும், மீனாவுக்கு கொடுமைக்கார மாமியார் அமைந்துவிட்டார் என்று சந்திரா கவலைப்படுகின்றார். ஆனால் இப்போது அவர்களின் நிலைமையை பார்த்தாயா என்று பேசுகின்றனர். இதனை விஜயா ஒட்டுக்கேட்டு விடுகின்றார்.

அதன் பின்பு அங்கு வந்த மீனாவின் அம்மாவிடம், “என்னைப் பற்றி இப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறீர்களா?” என்று விஜயா வாக்குவாதம் செய்கின்றார். “இனி ஒரு நிமிஷம் கூட இங்கு இருக்க மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருக்கும்போது, அங்கு முத்துவும் மீனாவும் வருகின்றனர்.

மேலும் என்ன நடந்தது என்று கேட்ட மீனா இறுதியில் “நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறி கிளம்புகின்றார். ஆனால் முத்து அவரை தடுக்கின்றார்.

அதே நேரத்தில் விஜயா, “நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன். இன்னும் இரண்டு நாட்கள்தான் டைம். அதற்குள் வீட்டை மீட்கவில்லை என்றால் நான் எங்கேயாவது சென்று விடுவேன்” என்று கண்டிஷன் போடுகின்றார். 

இதனால் முத்து வேறு வழியில்லாமல், “இரண்டு நாட்களுக்குள் வீட்டை மீட்க முடியவில்லை என்றால் என் மூன்று வாகனங்களையும் விற்று விடுகின்றேன்” என்று கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோடு.

Advertisement

Advertisement