• May 22 2026

நடிகைகளை மட்டும் குறை சொல்லாதீர்கள்.. கவர்ச்சி காட்டினாலே தவறா.? முக்கிய பிரபலம் பகீர்.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகை பாயல் ராஜ்புத், தனது சமீபத்திய கருத்தின் மூலம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளார். தமிழில் ‘லெஜண்ட்’ சரவணனுடன் ‘லீடர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற அவர், தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாயல் ராஜ்புத், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவது குறித்து அவர் வெளிப்படையாக தெரிவித்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில், “சினிமாவில் கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல. எப்படி ஒரு கதாபாத்திரத்தில் அழுகை, கோபம், ஆக்ஷன் போன்ற உணர்வுகள் இருக்கிறதோ, அதேபோல் கவர்ச்சியும் ஒரு நடிப்பின் பகுதிதான். நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல,” என்று தெரிவித்தார்.

மேலும், “சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு துறை. அதில் எல்லை மீறாமல், யாரையும் முகம் சுழிக்க வைக்காத வகையில் இருக்கும் கவர்ச்சி தவறில்லை. அதை இயல்பாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

பாயல் ராஜ்புத்தின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சிலர் அவரது தைரியமான பேச்சை பாராட்டியுள்ள நிலையில், மற்றொரு தரப்பு இதுகுறித்து விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement