• Jul 07 2026

மகனுக்காக திருத்தணியில் தவம் கிடக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்.. மகுடம் சூடுவாரா விஜய்?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டணியும் முக்கியமாக மோதின. 


அதோடு, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் களமிறங்கியதால் தேர்தல் மிகவும் பரபரப்பாக அமைந்தது.

இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையின் முடிவில் யார் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பது தெளிவாகும் என்பதால், அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நேரத்தில், தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், திருத்தணி முருகன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். மகன் விஜய் தலைமையிலான கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவர் சிறப்பு வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement