• Jul 25 2026

விஜய்க்கு வந்த யோகம் லாரன்ஸுக்கும் வருமா? நடிகரின் அரசியல் என்ட்ரியை விளாசிய பிஸ்மி

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரவுள்ளதாக பரவி வரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து திரைப்பட விமர்சகரும், யூடியூப் சேனல் பேச்சாளருமான பிஸ்மி தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


அண்மையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகவா லாரன்ஸ், அரசியல் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு எதிர்வினையாக பிஸ்மி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் பேசுகையில், “தமிழ்நாட்டு மக்கள் ராகவா லாரன்ஸின் அரசியல் வருகைக்காக காத்திருக்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது நகைச்சுவையாக இருக்கிறது. அவரது அரசியல் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை, விரும்பவும் இல்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தால் நேரடியாக வரலாம். ஆனால் மக்களே சொல்ல வேண்டும் எனக் கூறுவது தேவையற்ற நாடகமாக தெரிகிறது” என்றார்.

மேலும், “நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகு பலருக்கும் அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிலர் செயல்படுகின்றனர்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பிஸ்மியின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் அதற்கு கடும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement