• Jul 05 2026

விளையாட நான் ரெடி... தவெகவை விமர்சிப்பவர்களை எச்சரித்த லாரன்ஸ்.! வைரலாகும் வீடியோ

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ரசிகர் மன்றத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள், சமூக நலப் பணிகள் மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்து பேசியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில், “TVK-வை சார்ந்தவர்கள் தற்குறி அல்ல, TVK-வின் அம்புக்குறி. நான் ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவாக பலமுறை பேசியிருக்கிறேன். இனிமேலும் பேசுவேன். அதனால் என்னையும் சிலர் விமர்சிக்கலாம். ஆனால் களத்திற்கு ஏற்ற மாதிரி விளையாட நான் தயாராக இருக்கிறேன்.” என்றார்.

மேலும், “தவெக அரசின் வளர்ச்சியையும் மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பையும் பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அவை அனைத்தும் அரசியல் பொறாமையின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

ராகவா லாரன்ஸின் இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அவரது ஆதரவாளர்கள் இந்த கருத்தை வரவேற்று பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில், அரசியல் வட்டாரங்களிலும் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. TVK தொடர்பாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ள இந்த ஆதரவு, அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement