ரேடியோ ஜாக்கியாக இருந்து ஹீரோ மற்றும் இயக்குநர் வரை வளர்ந்த ஆர்.ஜே பாலாஜி, தற்போது தனது இயக்கத்தில் உருவாகும் "கருப்பு" திரைப்படத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படம், அவர் கடந்த தோல்விகளை மீறும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் மூக்குத்தி அம்மன் 2 என திட்டமிடப்பட்ட இந்தக் கதை, தயாரிப்பாளர் ஐசரி கணேஷுடன் ஏற்பட்ட மோதலால், பாலாஜி தலைமையிலான தனிப்பட்ட திட்டமாக மாறியது. பின்னர், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நாயகனாக "கருப்பு" உருவாகத் துவங்கியது.
இப்போது, படம் தீபாவளிக்கு வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. ஓடிடி உரிமை விற்பனை இழுபறியிலும், இன்னும் ஒரு முக்கியக் காரணமாக, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இடையேயான மனக்கசப்பு முன்னிலையாகியுள்ளது.
படம் முழுமையாக எடிட் செய்த பின், இன்னும் 15–20 நாட்கள் ரீஷூட் செய்ய வேண்டுமென்று பாலாஜி தெரிவித்துள்ளாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பாலாஜி தன் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், "கருப்பு" படத்தின் எதிர்காலம் குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில், சூர்யாவின் முக்கிய கம்மர்ஷியல் ரிலீஸாக இருந்த படம் எப்போது வெளியாகும் என்பதற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை.
Listen News!