தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு... நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர், பின்னர் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் பெரும் கவனம் பெற்றார். இதையடுத்து 2010ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் திரைப்படத்தின் மூலம் silver screen-ல் கால் பதித்தார்.
தொடர்ந்து பல வெற்றி படங்களில் தனது திறமையை நிரூபித்த ஐஸ்வர்யா, கடந்த சில ஆண்டுகளாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் முக்கியமாக நடித்தாலும், பெரிய ஹிட் அளிக்க முடியாத காரணத்தால் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிவப்பு நிற சேலையில் அசத்தும் அழகுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தில் பதிவு செய்த புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன. அவரின் புதிய போட்டோஷூட் லுக் ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மீண்டும் திரையில் இடம்பிடிக்க ஐஸ்வர்யா எடுத்து வரும் முயற்சிகள் எவ்வாறு வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Listen News!