• Jul 05 2026

ரஜினி–கமல் படம் தள்ளிப் போகுதா? பாரதிராஜா பெயரும் இனி அழியாது! வலைப்பேச்சு சீக்ரெட்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. மறைந்த இயக்குநர் சிகரம் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்துவதிலிருந்து, புதிய படங்களின் அப்டேட்கள் வரை திரையுலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவை நினைவுகூரும் விதமாக அவரது பெயரில் விருது வழங்க வேண்டும், முக்கிய சாலைக்கு பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் திரையுலகில் எழுந்துள்ளன. அவரது பங்களிப்பை காலம் முழுவதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அவரது மறைவுக்குப் பிறகு அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ரசிகர்கள் கவனத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்த கருத்துக்களும், புது படங்களுக்கான அப்டேட்களும் வைரலாகி வருகின்றன.

அதன்படி அவர் கூறுகையில்,

பாரதிராஜா சார் மாதிரி ஒரு ஜாம்பவான் காலத்துக்கு காலம் வர முடியாது. அவர் பெயர்ல ஒரு விருது கொடுக்கணும், ஒரு சாலை பெயர் வைக்கணும் அப்படின்னு கோரிக்கை வருது. அது ரொம்ப நியாயமான கோரிக்கையே. அவரை நம்ம காலம் முழுக்க நினைவில் வைக்கணும்.

ரஜினி சார், கமல் சார் இருவரையும் வைத்து படம் பண்ணுறது எளிதல்ல. தேதிகள், தயாரிப்பு பிரச்சனைகள் எல்லாம் இருக்குது. அதனால அந்த படம் கொஞ்சம் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கு. ஆனா ரசிகர்களுக்கு இது ரொம்ப பெரிய எதிர்பார்ப்பா இருக்குது.

அதுல அவர் 5 ரூபாய் டாக்டரா நடிக்கிறாரு அப்படின்னு சிலர் சொல்றாங்க, அது சரியில்லை. அவர் ஒரு எளிமையான, நேர்மையான டாக்டர் கேரக்டர்ல நடிக்கிறாரு. அது ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர் படம் மாதிரிதான் இருக்கும்.

அஜித் சார் படம் பற்றி நிறைய பேசுறாங்க. சிவா சார் – தனுஷ் படம் கூட பேசிட்டு இருக்காங்க. ஆனா இப்போ எல்லாமே லைன் அப்ப்ல தான் இருக்கு. எந்ததும் இன்னும் ஸ்டார்ட் ஆகல.. என தெரிவித்துள்ளார்.










Advertisement

Advertisement