• Jul 26 2026

தர்ஷினி மீட்பில் புதிய ட்விஸ்ட்.! இராவணனின் திடீர் என்ட்ரியால் மாறிய கதை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் தர்ஷினியை தேடும் காட்சிகள் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தர்ஷினி இருக்கும் இடத்தை ஜனனி மிக அருகில் நெருங்கியிருந்த நிலையில், அவளை மீட்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. 

ஆனால் அதிர்ச்சியாக, ஜனனி அந்த இடத்தில் தர்ஷினியை கண்டுபிடிக்காமல் திரும்பிச் செல்கிறார். இதனால் அந்த வாய்ப்பு முற்றிலும் நழுவி விடுகிறது.

இந்நிலையில், காட்டுப் பகுதியில் அருந்ததியுடன் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வரும் ஜனனி ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் இராவணன் ஆதி குணசேகரன் வீட்டிற்கே நேரடியாக வந்து சேர்கிறார்.

மாஸ் என்ட்ரியுடன் வீட்டிற்குள் வரும் இராவணனை பார்த்ததும் ஆதி குணசேகரன் அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார். அங்கு அனைவரிடமும், “நேரத்துக்கு வந்து என்னை காப்பாத்தியவர் இவர்தான்… இல்லையென்றால் நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்” என்று கூறி அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறார்.

இதற்கிடையில் தர்ஷினி காணாமல் போன தகவல் வெளிப்பட, இராவணன் உடனே “நான் அவளை கண்டுபிடிச்சு தரேன்” என உறுதி அளிக்கிறார். இதனால் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருக்க, ரசிகர்களிடையே “இது உண்மையிலேயே உதவியா? இல்ல புதிய சதி திட்டமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறுபுறம், தர்ஷினி கிடைக்காமல் மனஅழுத்தத்தில் இருக்கும் ஜனனி, “அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது” என கவலையுடன் தேடலை தொடர்கிறார். அருந்ததி அவரை தைரியப்படுத்தி மீண்டும் தேடுதலில் ஈடுபடுகிறார்.

இனி வரும் எபிசோட்களில் இராவணனின் உண்மையான நோக்கம் என்ன? தர்ஷினி யாரால் காப்பாற்றப்படுவார்? என்ற கேள்விகள் கதையை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

Advertisement

Advertisement