• Mar 10 2025

முத்துவுடன் சண்டை பிடிக்கும் மீனா....! இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படுமா?

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை முத்துவிடம் ஒரு பொண்டாட்டி எப்பவுமே புருசனுக்கு நல்லது நடக்கவேணும் என்று தான் நினைப்பாள் என்றார். அதுக்கு முத்து அப்பா அப்படி இருக்காது ஒரு ஆம்பள வீட்டை விட்டு வெளிய போகும் போது அவனுக்கு எவளவோ பிரச்சனை இருக்கும் அதனை சமாளிக்கணும் தானே அதுக்குத் தான் பொண்டாட்டிய எதிரில வரச்சொல்லி அவங்களப் பாத்தா பொண்டாட்டியோட பிரச்சனையே பாத்திட்டோம் வெளில வார பிரச்சனைய சமாளிச்சிடலாம் என்று சொன்னான்.

முத்து இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போது திடீரென மீனா பின்னால வந்து நிக்கிறாள். அதைப் பாத்தவுடனே அண்ணாமலை இனி எனக்கு வேலையில்ல நான் போறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து போறார். பிறகு முத்து மீனா அது சும்மா காமெடிக்கு வீடியோல பாத்தேன் அதுதான் சொன்னேன் என்றார். அதுக்கு மீனா வீடியோல பாத்த இப்படி சொல்லுவீங்களோ என்று கேக்கிறார்.


அப்ப நான் உங்களுக்கு பிரச்சனையா தெரியுறேன் என்று கோவமா சொல்லிட்டு மீனா போறாள். பிறகு முத்து மீனாவுக்கு பின்னால கெஞ்சிக் கொண்டு போறான். பின் ரெண்டு பேரும் கிச்சினுக்க இருந்து அடிபட்டுக் கொண்டிருக்கினம். அதைத் தொடர்ந்து மனோஜ் கோயிலில விஜயாவின் வேண்டுதல செய்யுறதுக்கு போய் நிக்கிறான்.

பிறகு மனோஜ் வேண்டுதல முழுமையாக முடிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கான். அப்ப விஜயா மனோஜுக்கு பேசுறாள் வேண்டுதல ஒழுங்கா செய்யவேண்டும் என்கிறாள். பின் கோவிலுக்கு வந்த முத்து இவர்களின் வேண்டுதலப் பாத்து சிரிக்கிறான். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement