• May 30 2025

ரவிமோகனுக்குப் பக்கச் சார்பு… என் மகளை இழுத்தது ஏன்? – புகாரளித்த ஆர்த்தியின் தந்தை.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகத்தில் சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் ஒன்றில் தற்பொழுது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ரவிமோகன், அவரது மனைவி ஆர்த்தி மற்றும் கெனிஷா இடையிலான முரண்பாடுகள் குறித்து, சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல கருத்துக்கள் வலம்வந்தன.


இந்நிலையில், பாடகியும், முன்னாள் நடிகையுமான சுசித்திரா, இந்த விவகாரத்தில் தலையிட்டு கருத்து கூறியதற்கெதிராக, நடிகை ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தற்போது அவதூறு குற்றச்சாட்டுகளுடன் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் குறிப்பிடப்பட்டதாவது,“சுசித்திரா ஒரு பாடகி எனக் கூறிக் கொண்டு, தமிழ் சினிமா உலகம் பற்றியும், என் மகள் ஆர்த்தி பற்றியும், பல எதிர்மறையான, அவதூறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.” அதுமட்டும் இல்லாமல், அவர் ரவிமோகன், கெனிஷா ஆகியோருக்கு ஆதரவு தூண்டும் விதமாகவும் பேசி வருவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தனது புகாரில் மேலும் கூறியதாவது, “சுசித்திரா, எனது மகள் ஆர்த்தியை, ஒரு பிரபல நடிகருடன் உறவுபட்டவர் எனக் கூறி, அவதூறாக வெளியிட்டு, அவரது வாழ்க்கையை திசைமாற்ற முயற்சி செய்துள்ளார்.” 

இந்தக் குற்றச்சாட்டால், சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே பரபரப்பாக பேசி வரும் விவகாரம் தற்பொழுது தீவிரமடைந்துள்ளது. இந்த புகாருக்கு காவல் துறையினர் இன்னும் பதில் அறிவிக்கவில்லை. ஆனால் சுசித்திரா இதற்கு எதிராக தன்னைப் பாதுகாப்பதற்கும், தனது உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் சட்டரீதியான பதில்கள் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement