• Jan 18 2025

யார் இந்த 'வதந்தி' சஞ்சனா.. வெறும் 22வயதுப் பெண்ணான இவருக்குள்.. இப்படி ஒரு ஆசையா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பினாலும் உணர்வுபூர்வமான நடிப்பினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒருவரே நடிகை சஞ்சனா. இவ்வாறாக பல வெப் சீரிஸ்களிலும் நடித்துப் பட்டையைக் கிளப்பி இருக்கின்றார்.


அந்தவகையில் '90 vs 2k காதலா', 'mom & me' எனப் பலவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம். அதிலும் குறிப்பாக 'mom with me' என்ற வெப் சீரிஸானது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு ரசிகர்களின் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. அதுமட்டுமல்லாது பல வாய்ப்புக்களும் வந்து குவியத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் 'வதந்தி' என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருக்கின்றது. இதில் லைலாவுடன் இணைந்து நடித்திருக்கின்றார் சஞ்சனா. அத்தோடு நாசர், எஸ்ஜே சூர்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் எனப் பலரும் நடித்துள்ளனர்.


இது 8எபிசோட்டுகளை கொண்ட, 8மணி நேர வெப் சீரிஸாக அமைந்திருக்கின்றது. இதில் வெலோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் சஞ்சனா. அதாவது இவரின் இறப்பினை மையமாக கொண்டதாக இந்த வெப் சீரிஸ் நகர்ந்து செல்கின்றது. 

இந்த சஞ்சனாவின் முழுப்பெயர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒரு தமிழ்ப் பெண். நவம்பர் மாதம் 8ஆம் திகதி 2000 இல் பிறந்திருக்கின்றார். அந்தவாகயில் இவருக்கு தற்போது 22 வயது தான் ஆகின்றது. இவரின் சொந்த இடம் ஊட்டி. ஆனால் இவர் பிறந்தது சென்னை. தற்போது செங்கல்பட்டில் இருக்கின்றார். 


இவர் B.com படித்துக் கொண்டிருக்கும்போதே வாய்ப்புக்கள் தேடி வந்தது. இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கொஞ்சம் கூட இல்லையாம். ஒரு தொழில்நுட்பவியலாளராக பணியாற்றவே விரும்பினார். 

தனது நண்பி ஒருவருடன் இணைந்து'ஆசமஜ்' என்ற சேனலில் பண்ணிய வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களே இவருக்கு நிறைய ஊக்குவிப்புக்களை கொடுத்து வந்தனர். இதன் மூலமாக தன இவர் இந்த பீல்ட்டுக்குள் நுழைந்திருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து தான் பல வெப் சீரிஸ், ஷாட் பிலிம்ஸ் பண்ண ஆரம்பித்தார். இவ்வாறாக ரொம்ப சின்ன வயசிலேயே மீடியாவை ஒரு கலக்கு கலக்கி இருக்கின்றார். இவருக்கு சீரியல் நடிக்க விருப்பம் இல்லையாம். போனால் சினிமாவிற்குத் தான் போவேன், ஹீரோயின் ஆக இருக்கணும் என்று இல்லை, நல்ல கேரெக்டர் கிடைத்தால் நடிப்பேன் எனக் கூறி இருக்கின்றார். 

ஆனாலும் 'வதந்தி' என்ற வெப் சீரிஸானது பல பெரிய பிரபலங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. இவ்வாறாக தன்னுடைய திறமையால் வளர்ந்து நிற்கும் சஞ்சனா கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஒரு நடிகையாக வெள்ளித்திரையில் மிளிர்வார் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. 

Advertisement

Advertisement