• Jan 18 2025

இனியா சீரியல் கதாநாயகன் ரிஷி யார் தெரியுமா?- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இவருக்கும் இப்படியொரு தொடர்பு இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் இனியா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.இதில் ரிஷி என்பவர் தான் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.எனவே விக்ரமாக நடித்து வரும் ரிஷி குறித்து தான் இப்போது பார்ப்போம் வாங்க.

தமிழ் சினிமாவில் 17 வயதில் இருந்தே நடித்து வருபவர் தான் ரிஷி. இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தாலும் இவருடைய குடும்பத்தினர் இவர் படிப்பதைத் தான் விரும்பினார்களாம். ஆனால் ரிஷி படிப்பை இடை நிறுத்தி விட்டு நாடகம் நடிப்பதிலே தான் ஆர்வம் காட்டி வந்தாராம்.


ஆங்கிலத்தில் பல நாடகங்களில் நடித்து வந்ததைத் தொடர்ந்து தான் தமிழில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததாம். அதன்படி இவர் தன்னுடைய 19 வயதில் விஜய் டிவியில் மின் விம்பங்கள் என்னும் சீரியலில் நடித்தாராம். இதனை அடுத்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தாராம்.

மேலும் இது தவிர ஜோடி சீசன் 2 இலும் நடனமாடி சிறந்த நடன கலைஞராகவும் வலம் வந்தாராம்.இதன்பின்னர் தனது 23 வயதில் சன்டிவியில் ஒளிபரப்பான டீலா நோடிலா என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தாராம்.

இது தவிர வில்லன் கதாப்பாத்திரங்களிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். குறிப்பாக ஆனந்த தாண்டவம் திரைப்படத்தில் முரட்டுத்தனமான வில்லனாக நடித்திருந்தார். இது தவிர பயணம் என்னும் படத்தில் நடித்திருக்கின்றார்.


இந்த நிலையில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு தற்பொழுது இனியா சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கவில்லை என்றும் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement