• Jan 18 2025

யார் இந்த 23 வயதான 'அயோத்தி' பட நடிகை ப்ரீத்தி... பிரபல நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்காரா..? இதோ பல தகவல்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சினிமா நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ப்ரீத்தி அஸ்ரானி. ஆனாலும் இவரை எல்லோருமே ப்ரீத்தி எனவே அழைப்பார்கள். இவர் 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் 7-ஆம் தேதி ஹைதராபாத்தில் தெலுங்கானாவில் பிறந்தார்.

இவரின் தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் இவர் ரொம்ப நன்றாக தமிழ், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் பேசக்கூடியவர். சமீபத்தில் 'அயோத்தி' படத்தில் நடித்ததை தொடர்ந்து பல பேட்டிகளையும் கொடுத்து வருகின்றார்.


இவர் படித்தது எல்லாமே தெலுங்கானாவில் தான். இவரின் கல்லூரிப் படிப்பை ஒரு பெண்கள் கல்லூரியில் தான் படித்திருக்கின்றார். இவரின் அப்பா பெயர் ராஜ்பூர். அம்மா பெயர் அஞ்சஸ்தானி. இவருக்கு ஒரு சகோதரி உண்டு. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.


இவர் 2012 இல் குழந்தைக் கலைஞராகதான் ஒரு தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். பின்னர் 2021 இல் ஹீரோயினாக 'இன்வினிட்டம்' எனும் ஒரு தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். மேலும் சின்னத்திரையில் 2016 இல் 'பகிண்டமாய்' என்ற சீரியல் வழியாக அறிமுகமாகி இருக்கின்றார். 


இவருக்கு மியூசிக்கில் ரொம்ப ஆர்வம் உண்டு. இவர் குஜராத்தை சேர்ந்த சிண்டி இனத்தைச் சேர்ந்தவர். மேலும் இவர் 16வயதில் ஒரு குறும்படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார். அதில் அவர் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கின்றார். மேலும் 2017 இல் 'மல்லிராவா' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார். 


மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே சீரியலின் மூலமாக தமிழ் தொலைக்காட்சியிலும் அறிமுகமாகினார். மேலும் நடிகர் சாய் றோனாக்கி என்பவருக்கு ஜோடியாக இவர் நடித்ததை தொடர்ந்து இவரைப் பற்றிப் பல கிசுகிசுக்களும் வெளியாகி இருந்தன. அதாவது இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. தமிழ் சினிமாவில் அயோத்தி படம் தான் ப்ரீத்திக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது.

இந்தப் படம் இவருக்கு மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. இவர் தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க வேண்டும் என தமிழ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement