விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றன. அதிலும் சிறகடிக்க ஆசை சீரியல், பாண்டியன் ஸ்டோர் 2, சின்ன மருமகள், மகாநதி போன்றவை மிகவும் பிரபலமாக காணப்படுகின்றன.
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுகிறது. இல்லத்தரசிகள், பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதைக்களம் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த சம்பவம் நடைபெறுள்ளது. அவற்றை விரிவாக பார்ப்போம்.
அதன்படி, ரோகிணியின் அம்மா அவருடைய அப்பாவின் திதிக்கு ஊருக்கு வருமாறு அழைக்கிறார். இதனால் கோவப்பட்ட ரோகிணி, வேறு வழியின்றி செல்கிறார்.

அதே நேரத்தில், அண்ணாமலை குடும்பமும் அதே கோவிலுக்கு வருகின்றனர். இதன்போது மீனாவை குடத்தில் தண்ணி எடுத்து வருமாறு ஐயர் சொல்ல, மீனாவும் செல்கிறார். அப்போது குளத்திற்கு அருகில் கிரிஷ், ரோகிணி குடும்பம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
மேலும், ரோகிணியின் அம்மா தனக்கு ஒரே ஒரு பிள்ளை தான் என்று எல்லா உண்மையையும் சொல்ல, அனைத்தையும் மீனா கேட்டு, கையில் இருந்த குடத்தை கீழே விழுத்தி விடுகிறார்.
இதனால் மீனாவை பார்த்து ரோகிணி பேரதிர்ச்சி அடைகிறார். பின்பு ரோகிணிக்கு பளார் என்று அறைகிறார் மீனா. இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.
எனவே, இந்த உண்மை விஜயா வீட்டிற்கு தெரியா வருமா? இல்லை ரோகிணியை பரிதாபம் பார்த்து இந்த உண்மையை மீனாவும் சேர்ந்து மறைப்பாரா என்பதை இனி வரும் எபிசோட்களில் பார்ப்போம்.
Listen News!