• Nov 09 2025

மயிலுக்கு தன்னை விட வயது கூட என்பதை அறிந்த சரவணன்.. பரபரப்பான திருப்பத்தில் டுடே promo.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், அரசி மயிலைப் பார்த்து நீங்க தீபாவளிக்கு படத்துக்கு எல்லாம் போயிருக்கீங்களா என்று கேட்கிறார். அதுக்கு மயில் ஒரே ஒருதடவை போயிருக்கன். 2010 ஆவது வருஷம் நான் பத்தாவது படிச்சிட்டிருந்தேன் அப்பதான் போனான் என்கிறார்.


அதைக் கேட்ட மீனா அப்புடிப் பார்த்தால் உங்களுக்கு 30 வயசா என்று கேட்கிறார். அதுக்கு மயில் இல்ல நான் தப்பா சொல்லிட்டன். அப்ப நான் அஞ்சாவது படிச்சிட்டிருந்தேன் என்கிறார். இதை எல்லாம் சரவணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


பின் சரவணன் மயில் கிட்ட உன்னோட ஆதார் கார்ட் எங்க என்று கேட்கிறார். அதுக்கு மயில் எனக்கு இப்ப தலைக்கு மேல வேலை இருக்கு உங்களுக்கு அப்புறமா காட்டுறேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து சரவணன் மயிலோட அப்பா கிட்ட ஆதார் கார்ட்டை வாங்கிறார். பின் ஆதார் கார்ட்டைப் பார்த்தவுடனே மயிலுக்கு தன்னை விட வயது கூட என்று தெரிஞ்சு சரவணன் ஷாக் ஆகுறார். 

Advertisement

Advertisement