• Jan 18 2025

"அமரன்" என்னோட டைட்டில சுட்டுட்டாங்க! கடும் கோபத்தில் இயக்குநர்! படத்துக்கு பூஜைகூட போட்டாச்சாம்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது ‘அமரன்’ திரைப்படம். இரண்டு தினங்களுக்கு முன்புதான் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் என்ற கதாபாத்திரத்தில் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.


இது உண்மையிலேயே மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகும் திரைப்படமாகும். இதுவரை இல்லாத அளவு சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது படத்தின் டீஸரை பார்த்தாலே தெரிகிறது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு எப்படி அமரன் என்ற தலைப்பை வைத்தார்கள் என்ற பேச்சும் ஒரு பக்கம் அடிபடுகிறது. 


ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் ப்ளாப் ஆன அமரன் பட டைட்டிலை இந்தப் படத்திற்கு எப்படி வைத்தார்கள் என்று கூறிவருகிறார்கள்.இதற்கிடையில் ஒரு உதவி இயக்குனர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அமரன் பட டைட்டிலை பற்றி அவருடைய ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார். இவர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் வரும் ‘ நல்லா இருமா ’ என்ற பாடலை எழுதியவர்.


அவர் பெயர் விஜய் முத்துப்பாண்டி. பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் ஏற்கனவே கௌதம் கார்த்திக்கை வைத்து அமரன் என்ற தலைப்பில் ஒரு மாஸ் கதையை தயார் செய்து வைத்திருந்தாராம்.  

அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ஸ்கிரிப்டையும் எழுதி முடித்துவிட்டு அதை எடுத்துக் கொண்டு அவருடைய குல தெய்வ கோயிலுக்கும் சென்று சாமி கும்பிட்டு வந்தாராம். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அமரன் டைட்டில் வெளிவந்ததும் இவருக்கு ஒரே ஷாக்.


நாம் ஆசைப்பட்டு வைத்திருந்த ஒரு பொருள் வேறொருவரிடம் இருக்கும் போது நம் மனம் எவ்வளவு பாடுபடும் என அனைவருக்கும் தெரியும். அதே மாதிரியான ஒரு மன நிலையில்தான் தன் உணர்வுகளை தன்னுடைய வலைதள பக்கத்தில் விஜய் முத்துப்பாண்டி பகிர்ந்திருக்கிறார்.  

அதாவது அவர் அமரன் ஸ்கிரிப்டை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு போகும் போது கூட அவர் பயணித்த பேருந்தில் கார்த்திக்கின் ‘வெத்தல போட்ட சோக்குல’ பாடலும் ஒலித்திருக்கிறது.

அதனால் அவருக்கு அப்பவே ஏதோ ஜெயித்து விட்டதாகவே எண்ணியிருக்கிறார். தற்செயலாக நடந்தாலும் இது அவர் மனதில் ஏதோ ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் இப்போது அந்த அமரன் டைட்டில் விஜய் முத்துப்பாண்டி கையில் இல்லை எனும் போது அவர் பதிவை பார்த்த அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement