• May 22 2026

ட்விஷா இறப்பிற்கு என்ன காரணம்.. வீட்டில் உண்மையில் நடந்தது என்ன? வெளியான சிசிடிவி

shali / 1 hour ago

Advertisement

Listen News!

முன்னாள் மிஸ் புனே பட்டம் வென்ற 33 வயதான மாடல் மற்றும் தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா இறப்பு தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 12ஆம் தேதி, போபாலின் கதாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டில் அவர் இறந்து கிடந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட ட்விஷா, திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்ததாக கூறப்படுகிறது.


சம்பவத்தன்று ட்விஷா வீட்டின் மாடிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை கீழே தூக்கி கொண்டு வரும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனால் அந்த இரவில் உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ட்விஷாவின் பெற்றோர், வரதட்சணை கொடுமை மற்றும் மன உளைச்சலே அவரது இறப்பிற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் உடலில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில்,  மனஅழுத்தம் காரணமாக ட்விஷா பாதிக்கப்பட்டிருந்தார் என அவரது மாமியார் தரப்பு கூறியுள்ளது. 

இதையடுத்து போலீசார் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள சமர்த் சிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement