• Jun 12 2026

இதுவரை அமைதியாக இருந்த மாரி செல்வராஜ்... விஜய் குறித்து திடீரென இப்படி பேசியது ஏன்?

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முழுமையாக பதவியேற்றுள்ளது. தவெக சார்பில் 31 அமைச்சர்களும், கூட்டணி கட்சிகள் சார்பில் 4 அமைச்சர்களும் இணைந்து அமைந்துள்ள இந்த அமைச்சரவை, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 


குறிப்பாக இளம் தலைமுறை, பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருப்பது சமூகநீதியை மையமாகக் கொண்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பல திரைத்துறை பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் அமைச்சரவையை பாராட்டியுள்ளார். 

அவர் வெளியிட்ட பதிவில், “சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் தலைமுறை அமைச்சர்கள், பட்டியலின மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் ஆகியோருக்கும் அவர் தனிப்பட்ட வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “மக்கள் பணிகள் சிறக்கட்டும்” என்ற அவரது நிறைவு வரிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement