• Mar 26 2026

என்ன மீனா இதெல்லாம்? இப்படித்தான் ஊரை ஏமாத்துறீங்களா! சிறகடிக்க ஆசை மீனாவை கலாய்த்த நெட்டிசன்கள்! Viral video...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவ்வளவு சுவாரஷ்யமான ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனா தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். இதனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். 


சீரியல்களில் பொதுவா நிறைய செட்அப்கள் வைப்பதுதான் அதிகம். அதில் முடிந்த பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ்  சீரியலில் கூட குழந்தைக்கு பதிலாக பே(F)ன்வைத்திருந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது. அதே போலத்தான் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவும் இருக்கிறது.   


நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் அந்த தொடரின் ஹீரோயின் மீனாவாக கோமதி பிரியா நடித்து வருகிறார். அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் சமையல் செய்வது போல காட்டுவதற்காக பாத்திரத்தில் பூக்களை நிரப்பி சமையல் செய்வது போல நடித்திருக்கிறார் மீனா.


அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பாத்திரத்தில் சாமந்தி பூ பூத்தது, இப்படி தான் ஊரை ஏமாத்துறீங்களா என கலாய்த்து வருகின்றனர். அதோடு  வீடியோ இதோ...


Advertisement

Advertisement