• Jan 18 2025

9 வருடங்கள் ரிலேஷன்ஷிப்! பிரேக் அப்பில் முடிந்த விக்னேஷ் சிவன் முதல் காதல்! அப்போ நயன் எத்தனையாவது?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவின் காதல் தோல்விகள் பற்றி அனைவரும் தெரியும் ஆனால், அவருடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் காதல் தோல்வி குறித்து நமக்கு தெரியாது. முதல் முறையாக தனது காதல் தோல்வி பற்றி அவரே நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.


அதில் அவர் கூறியதாவது 'நான் காதலித்த பெண் மிகவும் மாடர்ன் ஆனவள். என் அம்மா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். ஒருமுறை தீபாவளிக்கு முதல் முறையாக என்னுடைய காதலியை எனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தேன்'. 'தீபாவளிக்கு அன்று அனைவரும் என் வீட்டில் பாரம்பரிய உடையை அணிந்திருந்தனர். ஆனால், என்னுடைய காதலியோ டீ-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து மிகவும் மாடர்னாக வந்திருந்தாள்'.


'எனது காதலியும் என் அம்மாவிம் சந்தித்துக்கொண்ட முதல் சந்திப்பே நன்றாக அமையவில்லை. என் அம்மாவிற்கு அவளை அவ்வளவாக பிடிக்கவில்லை. அவளுக்கு என் அம்மா நடந்துகொண்ட விதமும் பிடிக்கவில்லை'. 'உதாரணத்திற்கு என் வீட்டில் ரசம் ஒரு கரண்டடியில் எடுத்தால், அதே கரண்டியை வைத்து சாம்பாரையும் எடுப்பார்கள். அது எனது காதலிக்கு பிடிக்கவில்லை. இது மிகவும் சிம்பிளான ஒரு விஷயம் தான், ஆனால் அது அவளுக்கு பிடிக்கவில்லை'.


'அவளும் நாளும் 9 வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால் அது சுமுகமானதாக இல்லை. குடும்பத்திற்கு செட் ஆகாத காரணத்தினால் எங்களுடைய காதல் பிரேக் அப்பில் முடிந்துவிட்டது' என கூறினார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.


தனது காதல் தோல்வி குறித்து இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பேசிய இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. முதல் காதல் தோல்வியில் முடிந்தாலும், தற்போது தனது காதல் மனைவியான நயன்தாராவுடனும், இரு பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 

Advertisement

Advertisement