• Sep 20 2024

இது என்ன பாரதிகண்ணம்மா சீரியலுக்கு வந்த புதிய சோதனை-கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் சில சீரியல்கள் நெட்டிசன்களிடம் எப்படியாவது சிக்கித்தவிக்கிறார்கள்.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடியும் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு அந்த சீரியல் பரபரப்பு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

எனினும் தற்போது பாரதியின் மருத்துவமனையில் கண்ணம்மா வேலை செய்து வருகின்றார். அவர்கள் குடும்ப பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க தற்போது அந்த மருத்துவமனையை தீவிரவாதிகள் hijack செய்வது போல காட்டப்பட்டு இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தீவிரவாதிகள் மருத்துவமனையை கைப்பற்றி அங்கிருக்கும் அனைவரையும் பிணை கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்கின்றனர்.மேலும் அது தான் இந்த வாரம் முழுக்க சீரியலில் வரபோகின்றது.



தற்போது ப்ரொமோவை பார்த்த நெட்டிசன்கள் எல்லோரும் கலாய்த்து வருகின்றனர். அத்தோடு லோ பட்ஜெட் பீஸ்ட் படம் போல் இருக்கு என ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ராஜா ராணி 2ல் தீவிரவாதி வருவதை போல காட்டினார்கள், தற்போது அதே பார்முலாவை தான் பாரதி கண்ணம்மா இயக்குநர் கையில் எடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் கலாய்த்து தள்ளும் சில ட்விட்கள் இதோ..




Advertisement

Advertisement