தமிழ் திரையுலகில் பையா , பாண்டிநாடு மற்றும் பாயும்புலி போன்ற படங்களை இயக்கி மக்கள் மனங்களை கவர்ந்தவரே இயக்குநர் சுசீந்திரன். இவர் தற்பொழுது 2கே கிட்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளதுடன் அந்தப் படத்தை இன்று திரையரங்குகளில் வெளியிட்டும் உள்ளார். அத்தகைய இயக்குநர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கதைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், தனது தந்தையிடம் இருந்தே தனக்கு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததாக கூறினார். மேலும் மணிரத்தினம் சாரின் படத்திற்கு திரையரங்கில் கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் தனக்கு இன்னும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டது என்றார்.
இயக்குநராக வர முடியாவிட்டால் திரைக்குள்ளேயே வேற ஏதும் வேலை செய்வதற்கு முடிவெடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் தான் எடுத்த முதலாவது படத்தின் வெற்றியை பார்த்தவுடன் தன்னுடைய அப்பாவிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது என்றார். அத்துடன் இயக்குநராக வருவதற்கு முன்னர் திருமண மண்டபம் ஒன்றில் வேலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் சுசீந்திரன் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையையும் காதலையும் மிஸ் பண்ணியதாகவும் கூறியுள்ளார். அத்துடன் 2கே கிட்ஸ் என்ற படம் தற்கால இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே அமைந்து கொண்டது என்றதுடன் இந்தப் படத்தை இயக்கியதை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Listen News!