• Apr 27 2026

மறைந்து பார்க்கும் மாயம் என்ன.? ஜோவிகாவின் புதிய போஸ் வைரல்

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா. இவர் தனது வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகின்றார்.

எனினும், இவருடைய மூத்த மகன் விஜயகுமார் வீட்டிலேயே வசித்து வருகிறார். தற்போது வனிதாவுடன் அவருடைய இரண்டு மகள்கள் மட்டும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.


வனிதா விஜயகுமார் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்த நிலையில், இதுவரை மூன்று திருமணங்கள் செய்துள்ளார். இதனால் பலரிடமும் இவரைப் பற்றி நெகட்டிவ் கருத்துக்கள் காணப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து, தனது மகள் ஜோவிகாவையும் சினிமாவில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினார். 

அதன் பின்னர் வெளியே வந்த ஜோவிகா, மாடலிங் துறையிலும், பார்த்திபனிடம் அசிஸ்டென்டாகவும் பணியாற்றினார். அதன் பிறகு, இவரது நடிப்பில் “டீன்ஸ்” திரைப்படம் வெளியானது.

மேலும், தனது அம்மா வனிதாவையும் ராபர்ட் மாஸ்டரையும் வைத்து “மிஸ்டர் அண்ட் மிஸஸ்” திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிகா விஜயகுமார், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அதில், ஒரு மரத்தின் பின்னால் இருந்து பார்க்கும் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள், “மறைந்து இருந்து பார்க்கும் மாயம் என்ன?” என்று தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Advertisement

Advertisement