• Jun 07 2026

தரையில் அமர்ந்து மகனின் ஆட்டத்தை ரசித்த அஜித்.. வைரலாகும் புகைப்படங்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

சென்னையில் உள்ள Madras Arena மைதானத்தில் தனது மகனின் கால்பந்து போட்டியை எளிமையாக அமர்ந்து கண்டு ரசித்த நடிகர் அஜித் குமார் பற்றிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


சாதாரண ரசிகரைப் போலவே தரையில் அமர்ந்து தனது மகனின் விளையாட்டை கவனமாக பார்த்துக்கொண்டிருந்த அஜித் குமார், தனது எளிமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார். 

பிரபல நடிகராக இருந்தாலும், எந்த வித பிரம்மாண்டமும் இன்றி பொதுமக்களுடன் கலந்து பழகும் அவரது இயல்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் வெளியானதும், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். “இதுதான் உண்மையான ஹீரோ”, “எளிமையின் எடுத்துக்காட்டு” போன்ற கருத்துக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

Advertisement

Advertisement