• Aug 18 2025

விகடன் விருது ஜெயிச்ச விஜய்சேதுபதி.. புறக்கணிக்கப்பட்ட விக்ரம்.! நடந்தது என்ன.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தை ஒப்பீட்டளவில் பாராட்டும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகவே விகடன் சினிமா விருதுகள் விளங்குகின்றன. இதில் நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எனப்  பலரும் தங்கள் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்தனர்.


2024-ஆம் ஆண்டுக்கான விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விஜய் சேதுபதிக்கு 'சிறந்த நடிகர்' விருது வழங்கப்பட்டமை, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில், 'தங்கலான்' படத்தில் அபாரமான நடிப்பைக் கொடுத்த நடிகர் விக்ரமுக்கு எந்தவொரு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்பதே சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.


விக்ரம் நடித்த 'தங்கலான்' படம், தமிழ் சினிமாவின் சமீபத்திய காலத்தில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்பதால், அது ஒரு உண்மையைச் சித்தரிக்கும் முயற்சியாகவும் அமைந்தது. அத்தகைய விக்ரமுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ரசிகர்கள் சற்று கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement