• Jun 13 2025

திருப்பாச்சி விஜயின் தங்கையா இது...! வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்...!

Roshika / 23 hours ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் பேரரசு கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் திருப்பாச்சி. இப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்ப்பு உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில்   விஜய்யுடன் இணைந்து த்ரிஷா மற்றும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பசுபதி, மல்லிகா ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது விஜயின் தங்கையாக நடித்த மல்லிகாவின்  போட்டோஸ்  தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


மேலும் இவர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் மேலும் பல திரைப்படங்களில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.


இந்த நிலையில்  மல்லிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  திருப்பாச்சி படத்தில் நடித்த நடிகையா இது ! என ஆச்சரியத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இதோ.







Advertisement

Advertisement