கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவை அசத்தினார். பல விமர்சனங்களுக்கு மத்தியில் படம் வெளியாகி இருந்தாலும் வசூலில் சாதனை படைத்தது. பின்னர் சமீபத்தில் வெளியாகிய டிராகன் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இவர் தொடர்ந்து விக்கினேஷ் சிவன் இயக்கத்தில் lik எனும் படத்தில் நடித்து வருகின்றார்.
இதைவிட மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்திவாசன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்தினை திடீரென படக்குழு நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இடைவேளைக்குள் பிரதீப் விக்கினேஷ் சிவன் படத்தின் பாடலிற்காக மலேசியா சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஷெடூலினை 12 நாட்களுக்குள் சென்னையில் கிரீன் மேட் போட்டு எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டிராகன் படத்தின் பின்னர் பிரதீப்பிற்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!