• Apr 29 2026

"விஜய் படத்தை வேறு வழியின்றி இயக்கினேன்.." எஸ்.ஏ சந்திரசேகர் பேச்சு...!

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துவருகிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய தங்கர் பச்சான் இப்போது சினிமா உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவர் மகன் விஜித் 'பேரன்பும் பெருங்கோபமும்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.


இந்த படத்தின் லாஞ்சிங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் கலந்துகொண்டு பேசினார். அவர் "தனது மகனை தானே சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நானும் எனது மகனை அப்படி தான் அறிமுகப்படுத்த விரும்பினேன்.விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குநர்களிடம் போய் நின்றேன். ஒருவரும் முன்வரவில்லை. அதனால் வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன்" என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement