• Sep 19 2024

நடிகர் விக்ரமிற்கு நடந்தது என்ன..?அவரது மேனேஜர் ரசிகர்களுக்கு கொடுத்த விளக்கம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னுடைய வெவ்வேறு நடிப்பினால் ரசிகர்களை தன்வசம் கொண்டவர் தான் நடிகர் விக்ரம்.

சாதாரணமாக ஆக்ஷன் காட்சி, காதல் காட்சி என படங்கள் நடித்து ஹிட் கொடுத்து செல்லாமல் படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புபவர்.

இவரைப் பற்றி இன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வந்தது. அது என்னவென்றால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

மேலும் இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் மேனேஜ்ர் தனது டுவிட்டர் பக்கத்தில், விக்ரம் அவர்களுக்கு மார்பில் கொஞ்சம் வலி ஏற்பட்டது அவ்வளவு தான், செய்தியில் வந்தது போல் மாரடைப்பு எல்லாம் இல்லை.

இப்போது நன்றாக தான் இருக்கிறார், அவரது குடும்பத்திற்கு நாம் இப்போது தனிமையை கொடுக்க வேண்டுமென பதிவு செய்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement