• May 19 2024

48 வயது நடிகைக்கு நடந்த சம்பவம்-பகீர் அளிக்கும் பேட்டி- நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா ,மனசே மவுனமா உள்பட பல படங்களில் நடித்தவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை சார்மிளா.தமிழ் மட்டுமில்லை மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவிற்கு நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே மலையாள நடிகர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சார்மிளா. ஆனால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின்னர் 2006 ஆம் ஆண்டு ராஜேஷ் என்ற இன்ஜினியரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.அத்தோடு இவருக்கு ஒரு மகன் உள்ளான். ஆனால் இரண்டாவது திருமண வாழ்க்கையும் சரியாக அமையாமல் அதுவும் விவாகரத்தில் முடிந்தது. தற்போது சிங்கிள் மதராக தனது மகனுடன் வசித்து வருகிறார் சார்மிளா.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சார்மிளா, சினிமா வாழ்க்கையில் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அதில், மலையாளத்தில் நாயகியின் அம்மாவாக ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஷூட்டிங் கோழிக்கூட்டில் நடைபெற்றது. அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் 24 வயது இளைஞர்கள்.

மேலும் அப் படப்பிடிப்பு தொடங்கியபோது என்னை அக்கா என்று அழைத்தார்கள். ஆனால் அடுத்த 3நாட்களில் அவர்களின் உதவியாளர்களை அனுப்பி அட்ஜெஸ்மெண்ட்டுக்கு ரெடியா என்று கேட்டனர். இதற்காக 50 ஆயிரம் வரை பேரம் பேசினார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களில் பிடித்த ஒரு நபரை தேர்வு செய்து அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்கள்.

என் மகனைவிட கொஞ்ச வயசுதான் உங்களுக்கு அதிகம். அதனால் என்னை அம்மா ஸ்தானத்தில் பாருங்கள் என்று சொன்னேன். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால், படத்தில் இருந்து விலகி அடுத்த நாளே சென்னை திரும்பிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகைகள் தனியாக இருந்தால், வயதில் சிறியவர்கள் கூட எல்லை மீறி நடந்துகொள்வார்கள் இந்த பிரச்சனையை சினிமாத்துறையை சார்ந்த பலர் எதிர்கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement