• Aug 23 2025

"thugh life " வசூலில் பாரிய திருப்பம்..! நடந்தது என்ன? 10 நாளில் இத்தனை கோடியா?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் நாயகன் படத்திற்கு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் மீண்டும் இணைந்த திரைப்படம் 'தக் லைஃப்'.  அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 


மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் படத்திற்கு ஒரு முக்கிய உறுதுணையாக இருந்தது. ஜூன் 5ம் தேதி வெளிவந்த இப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்தது. 


ஆனால் இத்தனை விமர்சனங்களுக்கும் இடையில் படத்தின் மொத்த உலகளாவிய வசூல் ரூ. 89 கோடியாக இருக்கிறது என புதிய தகவல் வெளியாகியுள்ளது.  படத்தின் ஃபெர்ஸ்ட் ஹைபிலேயே வசூலை இழுத்ததென வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படம் பொருளாதார ரீதியாக பாரிய இழப்பை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement