பிரபல இயக்குநர் சங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியான போதும் தோல்வியை தழுவியது.
அதன் பின்பு ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்து முடித்துள்ளார் சங்கர். ஆனாலும் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் லைக்கா தடையாக இருந்தது.
அதாவது இந்தியன் படத்தில் மூன்றாவது பாகத்தை ஷங்கர் எடுத்து தர மறுக்கின்றார். இதனால் அவருடைய அடுத்த படம் ரிலீஸ் ஆகக் கூடாது என லைக்கா நிறுவனம் கவுன்சிலில் புகார் அளித்தது. இதனால் கேம் சேஞ்சர் படத்தில் தயாரிப்பாளர் முதல் அனைவருக்கும் தலைவலி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கும் கமல், சங்கர், லைக்கா தரப்பு மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஆகிய நான்கு பேரும் வீடியோ கான்பிடன்ஸ் காலில் பேசி பிரச்சினையை முடித்துள்ளனர்.
குறித்த பேச்சு வார்த்தையில், கமலஹாசன் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் இந்தியன் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படும். அதற்குப் பிறகு அன்பறிவு மாஸ்டரின் படத்துக்கு நடிப்பதாகவும் கமல் தீர்வு வழங்கியுள்ளார். மேலும் கமலஹாசனின் சம்பளப் பிரச்சனைகள் அனைத்தையும் உதயநிதி தரப்பில் இருந்து சரி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது .
இந்த நிலையில், இது தொடர்பில் வலைப்பேச்சு டீமில் உள்ளார்கள் கூறுகையில், கிட்டத்தட்ட 500 தியேட்டர்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு இருந்த தடை முற்றிலும் விலகி விட்டது. சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. லைக்கா தமது படத்தை முதலில் முடித்து தரும்படி கேட்க, அதற்கு கமலும் ஓகே சொல்லியுள்ளார்.
கமல் அமெரிக்காவில் இருந்து வந்ததும் அதற்காக தேதி வழங்குவார். அத்துடன் ஷங்கர் எடுத்த படத்தின் காட்சிகளை காட்டுமாறும் லைகா கேட்டுள்ளது. அதற்கும் சரியென தலையாட்டி உள்ளார் சங்கர். இதனால் தற்போது கேம் சேஞ்சர் படத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என குறிப்பிட்டு உள்ளார்கள்.
Listen News!