• Jan 09 2025

நடிப்பை இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க தம்பி..! சிவகார்த்திகேயனுக்கு விழுந்த அடி

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. இந்த படம் சிவகார்த்திகேயனின்  கேரியரில் மிகப்பெரிய திருப்பமாகவும் அமைந்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னை காலி செய்ய சோஷியல் மீடியாவில் ஒரு கூட்டமே காத்து கிடப்பதாக கூறியிருந்தார். இந்த தகவல் கடும் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய பதிவு ஆகி வருகின்றது.


அதாவது சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு தான் பாராட்டு அதிகமாக கிடைத்தது. அதேபோல அமரன் படத்திலும் சாய் பல்லவிக்கு நல்ல நடிகை என்ற பாராட்டு கிடைத்தது. இதனால் தன்னுடைய படங்கள் நல்லா ஓடினாலும் நல்ல கலெக்ஷன்களை அள்ளினாலும் அந்தக் கிரெடிட் தனக்கு கிடைப்பதில்லை என்று சிவகார்த்திகேயன் புலம்பி இருந்தார்..

இவ்வாறான நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர்  பக்கத்தில், லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி? நடிப்பை மேலும் இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க...என்று நீண்ட பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். இதோ அவருடைய பதிவு..


டான் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமரனில் சாய் பல்லவி நடிப்புதான் அப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது பலரின் கருத்து. அது உண்மையும் கூட..

பார்க்கிங் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், லப்பர் பந்தில் தினேஷ் நடிப்புதான் பெரிதாக பேசப்பட்டது.

அதற்காக ஹரீஷ் கல்யாண் நடிப்பை யாரும் குறை கூறவில்லை. நல்ல கதைகளை தேர்வு செய்கிறார் என அவரை பாராட்டவே செய்கிறார்கள.

அவரும் இப்படி பொதுவில் வந்து 'என்னை யாரும் பாராட்டல' என்று புலம்பவில்லை.

ஆகவே இப்படி சென்டிமென்ட் பிட்டெல்லாம் போடாமல்.. வாலி, பருத்தி வீரன், பிதாமகன், அசுரன் போன்று சிறந்த நடிப்பை தர முயலுங்கள். பாராட்டு தானாக வரும்.

ஒரே ஒரு அமரன் ஓடியதும்.. நீங்கதான் அடுத்த விஜய் என ஒரு க்ரூப் காமடி செய்தால்.. இன்னொரு க்ரூப் கலாய்க்கத்தான் சொய்யும்.

இதைவிட பல மடங்கு விமர்சனங்களை தாண்டித்தான் ரஜினி, கமல் அரை நூற்றாண்டு கடந்தும், விஜய், அஜித் கால் நூற்றாண்டு கடந்தும் இந்த இடத்தில் இருக்கிறார்கள்.

லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி? நடிப்பை மேலும் இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க... என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement