தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்க்கு இன்றைய தினம் டிசம்பர் 12ம் தேதி திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது . இவருடைய திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் தொடர்பில் பேட்டி கொடுத்த சேகுவாரா கூறுகையில், கீர்த்தி திருமணம் செய்து கொள்வது உண்மையிலேயே நல்ல விஷயம். அதை நான் வரவேற்கின்றேன். திருமணம் செய்தால் பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்பதற்காகவே பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்கள்.
இதனால் பல நடிகைகளின் வாழ்க்கையே வீணாகி உள்ளன. அந்த வகையில் சிம்ரனை பாராட்ட வேண்டும். அவர் படத்தில் பிஸியாக இருந்த போதும் திருமணம் செய்து தனது கணவர் குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார்.
d_i_a
அதைப்போலவே கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து செட்டில் ஆக உள்ளார். அதற்கு முதலில் அவரின் பெற்றோரை தான் பாராட்ட வேண்டும். கீர்த்தி சுரேஷ் பிரபலமான நடிகையாக காணப்பட்டாலும் அவரது சம்பாத்தியம் முக்கியம் இல்லை என்று திருமணத்தை செய்து வைக்க நினைத்து உள்ளார்கள். இந்த காலத்தில் யாரும் அப்படி நினைக்க மாட்டார்கள்.
ஆனாலும் கீர்த்தி சுரேஷ் 15 வருட காதல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை சுற்றி பல கிசுகிசு தகவல்கள் பரவின. அப்போதே அவர் காதலிப்பதாக கூறியிருந்தால் எந்த ஒரு கிசுகிசு தகவலும் பரவி இருக்காது.
ஆனால் அவர் அப்போது தனது காதலை பற்றி சொல்லாமல் மறைத்தார். திருமணம் ஆகும் நேரத்தில் மட்டும் தனது காதலை சொல்வது தான் ஏன் என்று புரியவில்லை. இருந்தாலும் அவர் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் சந்தோஷம்தான் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், கீர்த்தி சுரேஷிற்கு ஆயிரம் கோடி ரூபாயில் சொத்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் என்னைப் பொறுத்த வரையில் 300 அல்லது 400 கோடி வரையிலே அவருக்கு சொத்து இருக்கும் என தான் நினைப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கீர்த்தி சுரேஷுக்கு காலையில் இந்து முறைப்படியும் மாலையில் கிறித்தவ முறைப்படியும் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனாலும் இதுவரையில் கீர்த்தியின் திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!